மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 77 வது இந்திய சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை, கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் உடற்பயிற்சி துறையும் இணைத்து நடத்தியது. தேசிய கொடிப்பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த தேசியக்கொடி ஏற்றினார். தேசிய கீதம் பாடல் இசைக்க ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர். கல்லூரியின் தேசிய மாணவர் படை கேப்டன் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, சுதந்திர தின ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை தலைசிறந்த வல்லரசு நாடாகும் பொருட்டு ஐந்து முக்கிய உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அசோக்குமார், இரகு மற்றும் குருகுல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் நிறைந்தன் நன்றி உரை கூறினார். மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி