திருச்சி : தமிழகம் முழுவதும் கொரானா நோய் விரைவாகப் பரவி வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பை கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் ஒரு சில விதிமுறைகளை பின்பற்றும் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காவல் நிலையத்தில் தொற்று நோயின் காரணத்தால், காவல் நிலையத்திற்கு வரும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வெளியே நிறுத்தி அவர்களின் உடல் வெப்ப அளவை கண்டறியும் கருவி மூலம் பரிசோதித்த பின்னரே காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்த பரிசோதனையில் திருவெம்பூர் காவல் ஆய்வாளர்கள் திரு.ஞான வேலன் மற்றும் திருமதி. மங்கையர்க்கரசி ஆகியோர் தினமும் அனைவரையும் பரிசோதிக்கும் பணியை தாங்களாகவே முன்னின்று செய்து வருகின்றனர்.