வந்தவாசி:தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கோயில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்துள்ளது. வந்தவாசி அருகே அனுமதியின்றி மாரியம்மன் கோயிலில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடத்தியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து . திருவிழா நடத்திய கோயில் நிர்வாகி முத்து கிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.