திருவாரூர் : திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தெப்பத் திருவிழா (24 -5- 2024) முதல் (26/5/2024)வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது அதன்படி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அக்ரி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்போது தெப்பத் திருவிழா நடைபெற உள்ள கமலாலய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போக்குவரத்து மாற்றங்கள் வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி ஈஸ்வரன் அவர்கள் உடன் இருந்தார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்