திருவாரூர் : கடந்த 2021- ம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடைபெற்ற CPI ஒன்றிய செயலாளர் நடேசன் தமிழார்வன் அவர்களின் கொலை சம்பவத்தை தற்போது நடைபெற்றது போன்று, நீடாமங்கலம் பகுதியில் கொலை நடந்திருக்கிறது அதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது தஞ்சாவூர் செல்லக்கூடிய நபர்கள் மன்னார்குடி வழியாக செல்லவும் என whatsapp குழுவில் தற்போது வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத வதந்தி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் நபர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.