திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது கொட்டும் மழையிலும் பனியிலும் கொடிய வெயிலிலும் கடும் பணியிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை பேரிடர்கள் பாதிப்பின் போதும் தன் குடும்பத்தையும் மறந்து தன் தேசத்திற்காக பணிபுரிந்து உயர்நீத்த காவல்துறை காவலர்களுக்கு தலை வணங்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி தேசிய நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது அது சமயம் இன்று 21 10 2023 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள நினைவுத் தூணில் காவல்துறையில் பணிபுரிந்து பணியில் இருக்கும் போது நாட்டுக்காக தன் உயிரை துறந்த தியாகச் செம்மல்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ். ஜெயக்குமார் Msc அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T. ஈஸ்வரன் அவர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தனிப்பிரிவு ஆய்வாளர் p. ராஜா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை முறைப்படி துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்