திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு தமிழக அரசின் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வான்செய்தி கருவிகள் புதிதாக வழங்கப்பட்டு, இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இப்புதிய தொழில்நுட்பத்தில் செயல்படும் அதிநவீன வான்செய்தி கருவிகள் காவல் அலுவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் (11.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண்கரட், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு காவல் அலுவலர்களுக்கு அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வான்செய்தி கருவிகளை வழங்கினார்கள். மேலும் தமிழக காவல் துறையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்காக வான்செய்தி கருவிகள் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அன்றாட காவல் பணிகள், அவசர நிலைமைகள், குற்றத் தடுப்பு, கூட்டம் ஒழுங்குபடுத்தல் போன்ற பணிகளில் இவை பெரிதும் உதவுகின்றன என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண்கரட், இ.கா.ப., அவர்கள் கூறினார்கள்.
















