திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 10.40 மணியளவில் வான்வெளியில் அதிக அளவிலான சத்தம் ஏற்பட்டது. அப்போது சிறிய அதிர்வு உணரப்பட்டது. இது தொடர்பாக பொது மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். மேற்படி, சத்தமானது தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்திய விமான படை பயிற்சி விமானத்தில் நிகழ்த்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சி ஆகும். ஓத்திகையின் போது ஏற்பட்ட அதிர்வே அதிகபடியான சத்தத்திற்கு காரணமாகும். எனவே இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.