திருவாரூர்: குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
குழந்தைகளை கடத்தி செல்ல வெளிமாநிலங்களில் இருந்து நபர்கள் வந்திருப்பதாகவும், குழந்தை கடத்த முயன்ற போது பொதுமக்கள் பிடித்து அடித்ததாக சமூக வலைத்தளம் மூலம் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.
இதனால் மக்களிடையே குழப்பம், பீதி மற்றும் அச்சம் ஏற்படுகிறது. எனவே இதுபோன்று சித்தரிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பரப்புவது சட்டப்படி குற்றம்.
வதந்திகளை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.