தீபாவளி வந்துவிட்டது! எங்கிருக்கும் மக்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி சொந்த பந்தங்களுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடுவார்கள். அதனை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களும் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்குகின்றன. இந்நிலையில் சில குறிப்பிட்ட பொருட் களையெல்லாம் ரயில் பயணத்தில் கொண்டு செல்ல காவல்துறை தடை விதித்திருக்கிறது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்ல முடியாது. பட்டாசுகள், பெட்ரோல், டீசல் போன்ற அதிக ஆபத்துள்ள பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவே, அதனுடன் பயணிக்கக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது. எரிவாயு அடுப்பு, கேஸ் அடுப்பு போன்றவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் சிறைத் தண்டனை அல்லது அதிக அபராதம் செலுத்தவும் வாய்ப்புள்ளது.
பயணிகள் பெட்டியில் அல்லது ரயிலின் உள்ளே எங்கும் சிகரெட்டைப் பற்றவைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ரெயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165-ன் கீழ், பட்டாசு, அடுப்பு, எரிவாயு, பெட்ரோல் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் ரயிலில் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இது தவிர, பயணிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
திருவாரூர் ரயில் நிலையத்தில் திருவாரூர் காவல்துறை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பட்டாசுகளை கொண்டு செல்ல கூடாது என காவல்துறை அறிவித்துள்ளது மீறினால் வழக்கு தொடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்