திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் நூலகம் திறந்து பின்தங்கிய கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கல்வி வளர்ச்சிப்பணி திருவாரூர் மாவட்டத்தில் பின்தங்கிய தாய்கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் கல்வி அறிவினை பெருக்கிக்கொள்ளும் விதமாகவும் படித்து நல்ல வேலைகளில் சேர உதவி செய்யும் விதமாகவும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் திருவாரூர் தாலுகா காவல் சரகம் அகரதிருநல்லூர் பகுதியை தேர்ந்தெடுத்து அப்பகுதில் உள்ள சமுதாய கூடத்தில் பொதுமக்கள் உதவியுடன் சிறுவர்கள்,மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் புதிய நூலகம் அமைத்து அதனை இன்று (02.02.22) திறந்து வைத்தார்கள். மேலும் நூலக வளாகத்தில் மரக்கன்று நட்டு பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா