திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாக ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் விவசாய பிரச்சினைகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
2022-ம் ஆண்டின் முதல்கட்டமாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் எதிர்வரும் 19.01.22 அன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கீழ்கண்ட விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை அளிக்கலாம்
விவசாயிகளின் குறைதீர் மனுக்களில் காவல்துறையினரால் நடவடிக்கை எடுக்கமுடியாதபோது அதனை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உதவி செய்யப்படும். விவசாயிகள் அணுகவேண்டிய விவசாய பிரச்சினைகள் பாசன வாய்க்கால், குளங்கள், ஏரிகள், அணைகள் போன்ற பொதுச்சொத்துக்கள் மற்றும் பிற விவசாய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தல்
மணல் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக தோண்டுதல்
விவசாயிகளின் மீது தாக்குதல்
விவசாய விளைபொருட்கள் மற்றும் உற்பத்தி தடைபடாத வகையில் சுமூகமான போக்குவரத்து
விவசாயிகளுக்கு எதிரான கந்துவட்டி பிரச்சினைகள்
விவசாயத்திற்காக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உற்பத்தி விற்பனை போன்றவற்றில் விவசாயிகளை மோசடி செய்தல் மற்றும் பல..
திருவாரூர் மாவட்ட விவசாய பெருமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மக்கள் பணியில் திருவாரூர்மாவட்டகாவல்துறை.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா