திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்த ரஜினி@ பெரிய ரஜினி 42 என்ற ரௌடியை முன்பகை காரணமாக கடந்த 09.07.21 அன்று மாலை எடையூர் ECR-சாலையில்அப்பகுதியைச்சேர்ந்த மகாதேவன் என்பவரது தரப்பினர் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
தகவலறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் சாதி ரீதியான அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் காவலர்களை ஒன்றுதிரட்டி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.
பின்னர் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு கொலைச்சம்பவம் குறித்து தனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனிப்படையினர் 24-மணி நேரத்திற்குள் எதிரிகளை அடையாளம் கண்டு எதிரிகள் ராஜேஷ், மகாதேவன், பிரதீப், சம்பத், பொட்ட கார்த்தி@ கார்த்தி, ஆனந்த், சிதம்பரம் ஆகிய 07 பேரை கைது செய்தனர்.
கொலைச் சம்பவம் நடந்த 24-மணிநேரத்திற்குள் எதிரிகளை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
மேலும் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
திருவாரூரிலிருந்து குடியுரிமை நிருபர்
திரு.சகாயம் செபஸ்திக்கண்ணு
திருவாரூர் மாவட்ட தலைவர் – குடியுரிமை நிருபர் பிரிவு