திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள்உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடி மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் கள்ளதனமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக – 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு – 83 குற்றவாளி கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் – 300 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் – 1369 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய – 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி, மதுவிலக்கு வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும் சட்டவிரோத மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc.,(Agri.), அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.