திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டதில் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்து காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவிலான ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லையான திருவாரூர் – மன்னார்குடி சாலை வெள்ளக்குடி மெயின் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளி ௦5-பவுன் தாலி சங்கிலியை பறித்து செல்லும் போது, கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லையான வடபாதி ஆண்டியப்பன் கோவில் அருகில் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட முயன்ற – கூத்தாநல்லூர், வங்கார பேரையூர், காலணி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் கார்த்திக் (வயது-24). என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடமிருந்து வழிப்பறி செய்த 5பவுன் தாலி சங்கிலி முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு உடனடியாக குற்றவாளியை கைது செய்து வழிப்பறி செய்த 5பவுன் தாலி சங்கிலியை முழுவதுமாக பறிமுதல் செய்த கூத்தாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.நந்தகுமார், வடபாதிமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகரன், கொரடாச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சசிகலா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc,(Agri.,) அவர்கள் பாராட்டினார்கள். மேலும், இதுபோன்ற வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.)., அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.