திருவாரூர் : தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடன் மீட்புபணிகளை (24×7) மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 5-காவல் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழு ஒன்றிற்கு ஒரு உதவி-ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள், ஒரு Eicher வாகனம் என
மொத்தம் 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்கள் தனித்தனி வாகனங்கள் மற்றும் மீட்புபணி உபகரணங்களுடன் திருவாரூர்,நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,
முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்ட தலைமையிடங்களில் தயார்நிலையில் உள்ளனர்.
இக்குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் SDRF-பயிற்சி (பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி) முடித்தவர்கள் ஆவர். இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று (09.11.21) திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து 5- காவல் மீட்பு குழுவினரையும் மாவட்ட ஆயுதப்படையில் வளாகத்தில் ஒன்றுதிரட்டி மீட்புபணி உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து
மீட்புபணி காவல் அலுவலர்களுக்கு கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களை
எதிர்கொள்வது குறித்தும்,மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.
மேற்படி காவல் 5 காவல் மீட்புக்குழுக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா