திருவாரூர்: திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையராக உள்ள திரு. வி.ஆர்.சீனிவாசன் முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;
காவல்துறையில் இவரது முதல் பணியை தஞ்சை மாவட்டம் வல்லம் சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக தொடங்கி பின்னர், கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர், தென்காசி காவல் துணைக்கண்காணிப்பாளர், உதவி ஆணையர் திருச்சி கோட்டை மற்றும் பொன்மலை கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஊரகம் ஆகிய இடங்களில் பணியாற்றி பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரக கடந்த மூன்று ஆண்டுகள் முழுமையாக பணியாற்றினார்.
தன்னுடைய எளிமை, நேர்மையான அனுகுமுறை, விரிவான மக்கள் தொடர்பு, பெரும்பகுதி நேரம் சுற்றாய்வு மேற்கொண்டு குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கை பேணிகாத்தல், போக்குவரத்து மேம்பாடு என திறம்பட பணியாற்றி அரியலூர் மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.