இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட திருவாடானை அருகே 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் செம்மரக்கட்டைகள் தங்க பிஸ்கட்டுகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ஒன்பது பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு. வருண் குமர்களக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் தொண்டி அருகே உள்ள வீர சங்கிலி மடத்தில் செம்மரக்கட்டைகள் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலையடுத்து எஸ்பி வருண் குமார் உத்தரவின்பேரில் திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர் எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இதில் செம்மர கடத்தல்,போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கடத்தல் பொருட்களை திருவாடானை அருகேயுள்ள தொண்டியிலிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு படகு மூலம் கடத்த முயன்றதாக எஸ்பி வருண்குமார் தெரிவித்தார்.
அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் அவர்கள் வசமிருந்த ஹெராயின், தங்க பிஸ்கட்கள்,21 செல்போன்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருவாடானை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்