திருவள்ளூர் : தமிழக போக்குவரத்து ஆணையர்-சேப்பாக்கம், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு ரவிச்சந்திரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு மோகன் அவர்கள் உத்தரவின்பேரில் இப்பொழுது அடிக்கடி நிகழும் படிக்கட்டு பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் அவர்களால் விளக்க உரை அளிக்கப்பட்டது. திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓட்டுனர் உரிமத்தேர்வு, புதிய வாகன பதிவு, தகுதி சான்று மற்றும் இதர சேவைகளுக்காக அலுவலகம் வந்த 100க்கும் மேற்பட்ட நபர்களை ஒருங்கிணைத்து, படிக்கட்டு பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் அதற்கான சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்தும், இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் குறித்த அறிவியல் விளக்கம், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் கை சைகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் படியில் பயணம் செய்பவர்கள் மீது போக்குவரத்து மற்றும் காவல் துறை சார்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை