திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவிக்க சிறப்பு உதவி எண் 1800 599 7626 மற்றும் பகிரி (Whatsapp) எண் 98403 27626 ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், ஐபிஎஸ் அவர்கள் நேற்று துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது சிறப்பு உதவி மையத்தை தொடர்பு கொள்ள பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626 மற்றும் வாட்ஸ்அப் எண் 98403 27626 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தங்களது அனைத்து வகையான புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் கோரிக்கை மற்றும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக விசாரணை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும். இது தொடர்பாக மாவட்டத்தின் அனைத்து வருவாய் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய அரசு அலுவலகங்களில் மாவட்ட உதவி மையம் தொடர்பான விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை