திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட அனைத்து சாலைகளிலும் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திரிவதுடன் சாலைகள் இடையே படுத்துக் கொள்வதால் போக்குவரத்திற்கு இடையூறு நேரிடுவது டன் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது.
மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி திரு.சந்திரகாசன் தலைமையில் திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.நாகலிங்கம் துணை ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி மற்றும் காவல் உதவியாளர்கள் சேர்ந்து உரிமையாளர்கள் காப்பாற்றும் மாடுகள் இரவு முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு காலை 5 மணி அளவில் உரிமையாளருக்கு பால் கொடுத்துவிட்டு மறுபடியும் சுற்றித் திரியும் மாடுகள்தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாசூரில் அபாயகரமாக சுற்றித்திரியும் கால்நடை கலை திருவள்ளூர் போலீஸார் பிடித்து மாடுகளை மாட்டுத்தாவணியில் ஒப்படைத்தனர்.
பின்னர் மாட்டின் உரிமையாளர்க லை வரவழைத்து அவர்களை கண்டித்தும் சுற்றித்திரியும் நாடுகளினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விளக்கியும் அவர்களுக்கு இதுபோன்று சுற்றித் திரிவது பற்றி தெரியவந்தால் மாற்று உரிமையாளர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுரை வழங்கினார்.
இதுபோன்று தங்கள் பகுதியில் பொது இடங்களில் சுற்றித் திரிவது பற்றி தகவல் தெரிய வந்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இதுபோன்று மாடுகள் சுற்றி திரிவது தெரியவந்தால் பிறத்தியோக தொலைபேசி எண் 6379904848 தொலைபேசி மூலமாகவோ வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவித்து சாலை விபத்துகளை தவிர்க்க மாவட்ட காவல்துறை ஒத்துழைப்பு வழங்குமாறு திருவள்ளூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.சந்திரகாசன் அவர்கள் காவல் துறை சார்பாக கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை