திருவள்ளூர் : சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காட்டில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காட்டில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் 03/11/2019 அன்று திருவலங்காடு காவல்நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உதவி ஆய்வாளர்கள் திரு. சந்திரசேகரன், திரு. சேகர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூபாலன் அவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள். காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.