திருவள்ளூர்: இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களுக்கு, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவியும், நிகழ்ச்சி தொகுப்பாளரான திருமதி.ரமீசா அவர்கள் காவலர் தின வாழ்த்து தெரிவித்து, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்கள் காவலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டினார். பின் அங்குள்ள காவலர்களுக்கும் கேக் வழங்கினார்.
நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமீசா அவர்கள், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் திருமதி.சித்ரா தேவி மற்றும் பெண் காவலர்களுக்கு காவலர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கு குழந்தைகள் விளையாட ஒரு அறையை ஒதுக்கி இருப்பதை பார்த்து மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்தினார்.
திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவியான திருமதி.ரமீசா அவர்களின் மேற்பார்வையில் 300 பெண்கள் வேலை செய்கிறார்கள், விரைவில் அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் புதிதாக துவக்க உள்ளார்.
காவலர் தினம் நேற்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் காவலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியும், காவல்துறையினருக்கு பயனுள்ள வருட நாட்காட்டி வழங்கியும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.