திருவள்ளூர் : மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சோழவரம் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகை யிட்டு எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொன்னேரி டி எஸ் பி கல்பனா தத் தலைமையில் சோழவரம் போலீசார் தடுத்து நிறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்