திருவள்ளூர் :திருவள்ளூர் , ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் பைக்குகளை மர்ம நபரால் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இதனால், வாகன சோதனைகளை தீவிரப்படுத்துமாறு ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு போலீசாருக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி திருஅரவிந்தன் உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் திரு.சுரேந்திரகுமார் தலைமையில் பொதட்டூர்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த ஒருவரை மடக்கி விசாரித்ததில், முன்னுக்குபின் முரணாக பேசினார்.
மேலும், விசாரித்ததில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரத்தை சேர்ந்த மணி (எ) குபேந்திரன் (25) என்பதும், ஆர்.கே.பேட்டை மற்றும் பொதட்டூர்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் நான்கு மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது, மேலும், திருத்தணி, ராமாபுரம் பகுதிகளில் மளிகை கடைகளில் ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் மளிகைபொருட்களை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் வழக்கு பதிவு செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்