திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இருந்து ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலை வரையிலான 5 கி.மீ.தூரம் வரை ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்களில் போலீசார் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பொன்னேரி உதவி கண்காணிப்பாளர் திரு.பவன்குமார் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்து, தானும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகன பேணியில் பங்கேற்றார். பின்னர், ஜனப்பன் சத்திரம் கூட்டுசாலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பரப்புரை செய்தனர்.
ஹெல்மெட் அணிந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஷீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி சென்ற ஓட்டுநர்களுக்கும் சாக்லெட்களை வழங்கினர் அதேபோல, ஹெல்மெட் அணியாதவர்களிடம், அதன் அவசியத்தை வலியுறுத்தி அடுத்த முறை கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கூறி அவர்களுக்கும் போலீசார் சாக்லெட்டுகளை வழங்கினர்.
இதில் சோழவரம் காவல் ஆய்வாளர் திரு.நாகலிங்கம், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் திரு.மதியரசன், பொன்னேரி உதவி ஆய்வாளர் திரு.சிவராஜ், மீஞ்சூர் உதவி ஆய்வாளர் திரு.விஷ்னு, சோழவரம் உதவி ஆய்வாளர் திரு.ராஜ் உட்பட 50 க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்