திருச்சி : திருச்சி மாவட்டம் திருவரம்பூர் உட்கோட்டம் திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது. அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா ராணி தலைமை தாங்கினார். காவல் உதவி ஆய்வாளர் தீபா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் வழக்கறிஞர் ,குடும்ப நல ஆலோசகர் யசோதா, மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குடும்பத்தாருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி