திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. A.பவன்குமார் ரெட்டி IPS அவர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மனம் திருந்தி தானாக முன்வந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கவும், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தவிர்க்கவும் சம்பந்தமாகவும் ஆந்திரா மாநிலம் செம்மரம் வெட்ட செல்வதை தவிர்க்கவும், ஜவ்வாது மலையில் உள்ள 11 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் ஒன்றிய பெருந்தலைவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கிராம பொது மக்களை அழைத்து சுமார் 200 நபர்கள் அனைவரையும் அழைத்து ஜமுனாமரத்தூர் காவல் நிலையம் முன்பாக சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று 25.08.2021 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதில் 11 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் Hello Tiruvannmalai police கைபேசி நம்பர் அடங்கிய பேனர் வழங்கப்பட்டது .இந்த கூட்டத்திற்க்கு போளூர் துணை உட்கோட்ட DSP திரு அறிவழகன் அவர்கள் வரவேற்புரையும் , இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜமுனாமரத்தூர் வனச்சரகர் திரு. குணசேகரன் மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் திரு அருள் (NCIT) மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு திட்ட இயக்குனர் திரு எஸ் முருகன்( Child line) அவர்களும் காவல் வட்ட ஆய்வாளர் திரு ஜனார்த்தனன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார். மற்றும் ஜமுனாமரத்தூர் Ps உதவி ஆய்வாளர்கள் திரு. முருகன், திரு. குபேந்திரன், தனிபிரிவு ஏட்டு விஜய், காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்