திருவண்ணாமலை: தமிழக காவல் துறை இயக்குனர் திருC.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார்,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், வேலூர் சரக துணை காவல்துறை தலைவர் திரு.A.G.பாபு,இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் தலைமையில், 23.09.2021 இரவு முதல் 25.09.2021 மாலை வரை திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 421 குற்றபின்னனியுடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு,
சந்தேகத்திற்கிடமான 159 குற்றவாளிகளை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரனை மேற்கொண்டு அதில் 59 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 110 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து சுத்தி-01, கத்தி-12, அரிவாள்-6 வாள்-22 மற்றும் இரும்புகம்பி-03, உள்ளிட்ட மொத்தம் 44 ஆயுதங்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதில் குறிப்பிடத்தக்க நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 44 குற்ற பிண்ணனியுடைய நபர்கள் வருவாய் கோட்டாச்சியர்களிடம் ஆஜர்படுத்தி நன்னடைத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டும், நிலுவையில் இருந்த 05 நீதிமன்ற பிடிக்கட்டளை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடிக்கட்டளையை சார்வு செய்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.