செங்கத்தில் மதுபான பாட்டில்கள் விற்க முயன்றவர் கைது!
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.M.மலர், அவர்கள் தலைமையில் காவலர்கள் இணைந்து பாய்ச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொர்ப்பனந்தல் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில், சட்ட விரோதமாக கள்ளத்தனமாக இருசக்கர வாகனத்தில் மதுபான பாட்டில்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மற்றும் மதுபான பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு தலைமறைவானவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போளூர் பகுதிகளில் மதுபான பாட்டில்கள் விற்க முயன்றவர் கைது!
போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா, அவர்கள் தலைமையிலான அணியினர் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, சந்தவாசல் ஆகிய பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆரணி வட்டம், விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தம்மாள் (42), என்பவர் அவரது வீட்டின் அருகிலும், போளூர் வட்டம், முனியப்பன் தாங்கள் கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி (60), குப்பன் என்பவர் அவருக்கு சொந்தமான பெட்டிக்கடையிலும், போளூர் வட்டம், அல்லி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (51),, கோபால் என்பவர் அவரது வீட்டின் அருகிலும், கலசபாக்கம் வட்டம், இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த தேவராஜ் (35), குமாரவேல் என்பவர் அகரம் சிப்பந்தி மதுபானக்கடை அருகிலும் கள்ளத்தனமாக சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
80 கஞ்சா செடிகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி (25.09.2022) போளூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.D.குமார் அவர்களின் மேற்பார்வையில், ஜமுனாமரத்தூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் வட்டம், மேல்தட்டியப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுசிலா (45) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஜமுனாமுத்தூர் வட்டம், மேல்தட்டியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா செடிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 80 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர் கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்களின் தலைமையில், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.D.ராஜீவ்காந்தி அவர்கள் மேற்பார்வையில், மாவட்ட தனிப்படை தலைமை காவலர் திரு.V.செல்வகுமார், திரு.K.துரை மற்றும் காவலர்கள் இணைந்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவரப்பூண்டி கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் கஞ்சாவை வாங்கிக்கொண்டு வந்தவரை மடக்கி விசாரணை செய்ததில் அவரிடம் இரண்டு கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் அவலூர் பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் விற்பனை செய்வதாக தெரிய வந்ததை எடுத்து பாலாஜியின் வீட்டில் சோதனை செய்ததில் 2.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலும் 23.09.2022-ந் தேதி தலைமறைவான விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (22) மற்றும் தெய்வகுமார் (23) ஆகியோரை மங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடந்தவாடி அருகே தனிப்படை காவலர்கள் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related