காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இன்று (21.10.2023) திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படைமைதானத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
மேலும் கடற்கரையானாலும், பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி,இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட்டு பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 189 மடிந்த அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதிபூண்டு, அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த காவலர் வீர வணக்க நாளில் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.