திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 23). வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருக்கிறார். இவர் திருவண்ணாமலை கட்டபொம்மன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்
நேற்றுமுன்தினம் சரண்ராஜ் மோட்டார்சைக்கிளில் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வேட்டவலம் சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், சரண்ராஜ் மீது தாக்குதல் நடத்தி அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினர். சரண்ராஜ் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை கீழ்நாத்தூர் காலனி பகுதியை சேர்ந்த நாவரசு(23), தினேஷ்(25) உட்பட 4 பேர் என தெரியவந்தது. தினேஷ்,நாவரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட 2-பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்