திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R. சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.T. அசோக் குமார், அவர்களின் மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M.பழனி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில், மாவட்ட டெல்டா தனிப்பிரிவு போலீசார் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 64429லிட்டர் சாராய ஊறல், 969 லிட்டர் சாராயம்,180ml கொள்ளளவு கொண்ட 909 மதுபான பாட்டில்கள்,20லிட்டர் கள், மொத்தம் – 7556லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 05 இருசக்கர வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டு, 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 38 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்,
மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 37,865 லிட்டர் சாராய ஊறல், 15,947 லிட்டர் சாராயம், 193 லிட்டர் கள், 3969 பல்வேறு கொள்ளளவு கொண்ட மதுபாட்டில்கள் என மொத்தம் 6,50,825 லிட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு மூலப்பொருளான வெல்லம் 250 கிலோ, கடுக்காய் 1400 கிலோ, கைப்பற்றப்பட்டுள்ளது, மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 138 இருசக்கர வாகனங்கள், 02 மூன்று சக்கர வாகனம், மற்றும் 02 நான்கு சக்கர வாகனம், பறிமுதல் செய்யப்பட்டு 737 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 654 குற்றவாளிகளை, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.