திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூர் கிராமம், அஞ்சல் அலுவலக தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தேவசேனன் (24) மற்றும் திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 2 வது தெருவைச் சேர்ந்த முனுசாமி மகன் பவுன்குமார் (எ) PK (27) ஆகிய இருவரும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்போதைய திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.K.ஹரிகிருஷ்ணன் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்டம், வீரபாண்டி கிராமம், வேட்டவலம் மெயின் ரோட்டுத் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி தங்கம் வ/32 என்ற பெண் கள்ளச் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா அவர்கள் கைது செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பினார். மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட மூன்று நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.