திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்பபட்டில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த, சேத்பட் இருதய ஆண்டவர் தெருவை சேர்ந்த மைக்கல் மகன் திலீப்குமார் வ/35, என்பவரையும், சேத்பட் சவேரியா தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் (எ) அலெக்சாண்டர் மகன் நவீன் வ/24, என்பவரையும் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்கில் சேத்பட் காவல்துறையினர் மேற்கண்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேற்கண்ட இரண்டு நபர்களின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிச்சக்கரவர்த்தி IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி IAS., அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.