திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிசக்ரவர்த்தி IPS அவர்களின் உத்தரவுபடி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக்குமார் அவர்களின் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள் மற்றும் போளுர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M.குணசேகரன் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.ர.கவிதா, போளுர் காவல் ஆய்வாளர் திரு.அருண்குமார், ஜமுனமரத்தூர் உதவி ஆய்வாளர் திரு.லட்சுமணன் மற்றும் போலீசார் இணைந்து ஜமுனமரத்தூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மதுவிலக்கு வேட்டை நடத்தியதல், கோரமடுவு மற்றும் ஜமுனாமரத்தூர் மலை பகுதியில் 2000 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டு, சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 4 இருசக்கர வாகனங்கள் 180 லிட்டர் சாராயத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு, சாராய விற்ற குற்றத்திற்காக முத்துசாமி (45) , ராமகிருஷ்ணன் (27) மற்றும் பிரபாகரன் (31) ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் போளூர் தாலுக்கா தும்பகாடுஅஞ்சல் கீழூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மேனகா வயது 35 என்பவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.