வெளிநாட்டில் குடியேறியுள்ள மென்பொருள் வல்லுநர்கள் அல்லது மருத்துவர்கள் அல்லது சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் என தன்னைக் காட்டி கொண்டு, வெளிநாட்டிலிருந்து நல்ல வரனின் சுயவிவரங்களைத் தேடும் பெண்களைக் குறிவைத்து திருமண தகவல் மைய வலைத்தளங்களில் மோசடியான சுயவிவரங்களை உருவாக்குகிறார்கள்.
- மின்னஞ்சல்கள், ஆன்லைன் அரட்டைகள் அல்லது சில நேரங்களில் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் முக்கியமாக வெளிநாட்டு தொலைபேசி எண்கள் மூலம் பெண்களுடன் நெருங்கி பேசி அவர்களின் நம்பிக்கையை பெறுகிறார்கள்.
- பின்னர் திருமணம் செய்ய விரும்புவதாக கூறி தான் ஆசையுடன் பரிசுகளை அனுப்பியிருப்பதாகவும் அது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியால் நிறுத்தப்பட்டுள்ளது, அதை அங்கிருந்து விடுவிப்பதற்கு அவசரமாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது என கூறுவார்கள்.
- பாதிக்கப்பட்டவர்கள் பரிசைப் பெற சுங்க வரி மற்றும் பிற வரிகளை செலுத்துமாறு அவர்கள் கேட்பார்கள்.
- சில நேரங்களில், குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அவசர பணம் தேவை என்றும் அதை தான் விரைவில் திருப்பித் தந்துவிடுவேன் என்பார்கள்.
- அவர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் பறிப்பார்கள்.
பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள்:
- திருமண தைகவல் மைய வலைதளங்களில் திருமண கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, அவற்றின் பின்னணியைப் பற்றிய சரியான தகவல்களை சேகரிக்கவும்.
- திருமணத்திற்கு முன் ஒருபோதும் பணம் செலுத்த வேண்டாம்.
- சுங்கத் துறையைச் சேர்ந்த எவரும் எந்தவொரு நபருக்கும் வரிகளை அனுமதிக்க அழைப்பு விடுக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- மின்னஞ்சல் குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசியில் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- இது போன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், https: //cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கவும்.
இது ஒரு பொதுவான எச்சரிக்கை மட்டுமே. இது குறிப்பிட்ட தனி நபருக்கோ அல்லது தயாரிப்புகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எதிரானது அல்ல.















