கோவை: கோவை குறிச்சி மேட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மாணவன் ஹரி ஹரி நாதன் (வயது 20) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும் கடந்த 4ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் திருமணம் நடந்தது. இது பற்றிய தகவல் குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமிக்கு தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் குழந்தைகள் நல அதிகாரிகளுடன் ஹரிஹர நாதன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மைனர் பெண் ஒருவர் அங்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அந்தப் பெண்ணை மீண்டும் அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போத்தனூர் காவல் நிலைத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் ஹரி ஹர நாதன் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.














