திருப்பூர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர்.
அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை என அச்சிடப்பட்ட ஐந்தாயிரம் முக கவசங்களை மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமா(IPS)அவர்களிடம் வழங்கினார்கள்.
மாணவர்களின் செயலை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) சட்டம் மற்றும் ஒழுங்கு,மற்றும் உயர்திரு.சா.பிரபாகரன்(IPS) தலைமையிடம் வெகுவாகப்_ பாராட்டினார்கள்.