திருப்பூர் : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரானா தனது கோரதாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, 40 நாள் ஊரடங்கால், மக்களின் அன்றாட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாவட்டந்தோறும் உள்ள ஏழைக் குடும்பங்கள் அத்தியாசிய பொருட்கள் வாங்க முடியாமல், வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர், மக்களை பாதுகாப்பது மட்டுமே எங்கள் பணி என்று இல்லாமல், அரவணைக்கவும் துவங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதன்படி இன்று திருப்பூர் மாநகர ஊரக காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. மீனாகுமாரி அவர்கள் தலைமையில், 25 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினார்கள். இந்த செயலை செய்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார், IPS மற்றும் துணை ஆணையர்கள் திரு.பத்ரிநாராயணன்,IPS,. பிரபாகரன், IPS,. ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.