திருப்பூர்: திருப்பூர் மாநகர, தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏழை, எளியவர்கள், வேலைக்கு செல்ல முடியாத, காரணத்தினால், அன்றாட உணவு பொருட்கள் வாங்க முடியாமல், தவித்து வந்தனர். இதனை அறிந்த, திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் மற்றும் காவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் வசித்துவரும், 120 முதியோர்கள் உட்பட ஏழை குடும்பங்களுக்கு, ஒரு வாரத்திற்கான 10 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, உப்பு, எண்ணெய், வெங்காயம் மற்றும் காய்கறிகள் ஆகியவை கொடுக்கப்பட்டது.
மேலும் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கொரானா வைரஸ் நோய் தொடர்பாக பாதுகாப்பாக, இருப்பது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். மேலும் அவர்களுக்கு கிருமி நாசினிகள் மற்றும் முகத்துக்கு அணிவதற்காக மாஸ்க் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் இருக்கும் இடங்களில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.