திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்துள்ளார் இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் பிணமாகக கிடந்துள்ளார்.
இதனை அடுத்து பிணத்தை கை பற்றிய மாநகர மத்திய காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர் இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டியன் தனது தாய் முருகாயிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது சகோதரர் மற்றும் தாய் முருகாயி கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது எனவே மத்திய காவல் நிலைய தனிப்படையினர் அவர்களை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.