சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ல் நடப்பதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி காவல்துறை அணிவகுப்பு நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் உத்தரவின்படி, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாபன் தலைமையில் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.
அண்ணா சிலை அருகில் இருந்து துவங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலம் கூகுள் பர்க் சாலை, செட்டிய தெரு, மூல கடைவீதி, சீதளி வடகரை, நான்கு ரோடு சாலை, தேரோடும் வீதி, போஸ்ட் ஆபீஸ் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தனர்.
இந்த அணிவகுப்பில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தில் திருப்புத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சுந்தர மகாலிங்கம், திருக்கோஷ்டியூர் ஆய்வாளர் திரு.சேது, எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் திரு.விஜயன், நெற்குப்பை காவல் ஆய்வாளர் திருமதி.கலாராணி, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சித்திரை செல்வி, போக்குவரத்து ஆய்வாளர் திரு.மனோகரன், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் திரு.மலைச்சாமி, திரு.சுரேஷ்குமார், திரு.சத்தியசீலன், திரு.சண்முகம், திரு.நெருதன், திரு.ராஜாமுகமது மற்றும் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட காவலர்கள் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர். அப்பொழுது தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாகவும், அச்சமின்றி வாக்களிக்கும் வண்ணம் இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது என காவல்துறை வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துக் கொண்டே சென்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்