மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் காவல் நிலைய சரகம் விளாச்சேரி மெயின் ரோடு பசுமலை சந்திப்பில் வாகனங்களை சோதனை செய்யும் காவலர்கள் சிறிது நேரம் கூட தங்கி இளைப்பார முடியாமல் கடும் அவதிக்கு உள்ளனர். அதனை கருந்தில் கொண்டு திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிதாக அமைக்கப்பட்டது.
வாகன சோதனை சாவடியை திரு.சிவபிரசாத் IPS., காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் திரு .சிவராஜ் பிள்ளை மற்றும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி. மதனகலா சார்பு ஆய்வாளர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜஸ்டின் சரவணன்