மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது.
காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி இல்லாமல் கொரான தொற்று பரவும் அபாயம்.
மதுரை மாநகராட்சி பகுதியில் கொரானா நோயாளிகள் அதிகம் கண்டரியப்பட்ட 18 வார்டுகள் மற்றும் கொரானா நோயாளிகளின் தெருக்களை முற்றிலும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி 61வது வார்டு வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 3 பேருக்கு கொரானா கண்டறியப்பட்டதால் அப்பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் , வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில் வாரம்தோறும் காய்கறிச் சந்தை அமைக்கப்படுவது வழக்கம் அதே போன்று இன்று வாரச்சந்தை இயங்கி வருகிறது.
கொரான தொற்று நோயாளிகள் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த காய்கறி சந்தை தற்போது இயங்கி வருகிறது. காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும் போதிய சமூக இடைவெளி இல்லாமல் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வருவதால் அங்கு கொரான தொற்று பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி