திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (28.01.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளாதேவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் மனுக்களை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினர். மனுக்களை கவனமாக பெற்றுக் கொண்ட அவர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், பொதுமக்களின் பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும், காவல் துறை மக்களுடன் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
















