திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் பேரில், (13.02.2026) திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, சைபர் குற்றங்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள், மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து காவல்துறையினர் விளக்கமளித்தனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்விச் சூழல் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















