திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி V. சியாமளா தேவி அவர்கள் தலைமையில், MedLEaPR (Medico-Legal Examination and Post-mortem Reports System) தொடர்பான பயிற்சி குறித்து காணொலி வழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவ-சட்ட பரிசோதனை மற்றும் உடற்கூறு (போஸ்ட் மார்டம்) அறிக்கைகளை பதிவு, பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு செய்வது குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இப்பயிற்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் CCTNS பிரிவில் பணிபுரியும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். MedLEaPR என்பது காயம், விபத்து மற்றும் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகளை பதிவு செய்து பராமரிக்கும் ஒரு முக்கியமான அமைப்பு ஆகும். MedLEaPR அமைப்பு மூலம் மருத்துவ-சட்ட தொடர்பான அறிக்கைகள் விரைவாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை செயல்முறைகள் மேலும் வலுப்பெறும். அதிகாரிகள் இவ்வமைப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
















