திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (11.03.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 42 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
















