சிவகங்கை: மாவட்டம் திருப்பத்தூர் நகரில் வர இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு.செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். நகரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களான புதுப்பட்டி, லிம்ரா மெட்ரிக் பள்ளி, தென் மாபட்டு செந்தமிழ்ப்பள்ளி ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இவ்ஆய்வில் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநாதன், நகர் காவல் ஆய்வாளர் திரு.சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் திரு.மலைச்சாமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கண்ணன் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்